• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

சர்ச்சைக்குரிய மையமாக உருவெடுக்கும் : காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம்

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 7, 2025
in இலங்கை செய்திகள்
0
சர்ச்சைக்குரிய மையமாக உருவெடுக்கும் : காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email


மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம் இலங்கையின் வலுசக்தித் தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம் அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் வலுவாகவே பெற்றிருக்கின்றன.

முன்னதாக இந்தியாவின் அதானி நிறுவனம் இப்பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகிய போதும் உள்ளுர் மக்களின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு தனியார் முதலீட்டாளர்களின் துணையுடன் இலங்கை மின்சார சபை அத்திட்டத்தை இடைநிறுத்தாமல் நகர்த்துவது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மக்களின் எதிர்ப்பானது வெறும் மின் உற்பத்திக்கு எதிரானது அல்ல. அந்தப்போராட்டம் அந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலம் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானவொரு பரந்துபட்ட போராட்டமாகும்.

மன்னார் பிராந்தியம் புவியியல் ரீதியாகவும், கனிம வளங்கள் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு இல்மனைட் உட்படப் பல்வேறு வகையான கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்கள் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்கள் மன்னாரில் இல்மனைட்டை மிகக் குறைந்த செலவில் அகழ்ந்தெடுக்க முடியும் என்ற நிலை இங்கு கனிம மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார்.

மன்னார் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால் காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காகவோ அல்லது கனிமங்களை அகழ்வதற்காகவோ நிலத்தை ஆழமாகத் தோண்டுவது, நில மட்டத்தை மேலும் தாழ்த்தி இப்பிராந்தியம் சில வருடங்களிலேயே கடல் நீருக்குள் மூழ்கும் பாரிய அபாயம் உள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பைகள் மண் அகழ்ந்து அகற்றப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுவது இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. காற்றாலைக் கோபுரங்களை நாட்டுவதற்காக 25அடி வரை தோண்டி, கொங்கிரீட் மற்றும் மண்ணைக் கொட்டி மூடுவது, கரையோரங்களில் கொங்கிரீட் போடுவதனால் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்படுவது போன்ற கட்டுமானச் செயற்பாடுகள், மன்னாரின் பூகோள சமநிலையைச் சீர்குலைத்து, எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கின்றபோது மன்னார் வகிபாகம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெறுமதியானது. யுனெஸ்கோவ அங்கீகாரத்தினையும் அளித்துள்ளது. இங்குள்ள சூழலியல் வளங்கள், இலங்கைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு வலசைப் பறவைகளின் முக்கிய நுழைவாயிலாகவும் இனப்பெருக்க மையமாகவும் உள்ளன.

வலசைப் பறவைகள் இலங்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து மீண்டும் குஞ்சுகளுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் இந்த அரிய பறவைகளுக்கு உயரமான காற்றாலை கோபுரங்களும் அவற்றின் சுழலும் இறக்கைகளும் நேரடியான அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காற்றாலைத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உள்ளுர் இயற்கைக்குப் பேரிழப்பாக உள்ளது. இச்சூழலியல் பாதிப்புகளை முழுமையாக ஆராயும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது.

காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் சமூகப் பொருளாதார விளைவுகள் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. இப்பகுதி மக்கள் பிரதானமாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் முன்னர் இருந்ததைக் காட்டிலும் மீன்களின் வரத்து மிகக் குறைவாகி தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதாகக் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தாழ்வுபாடு போன்ற கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேலும் நிலத்தில் நீர் தேங்கி நிற்கும் காலம் நீடித்துள்ளதால் மழைக்காலத்திற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் எதிர்ப்பானது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்த தீவிரமான விமர்சனமாகவும் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை போன்ற அமைப்புகள்இ இத்தகைய பாரிய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அது பகிரங்கப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் மக்களின் உணர்வுகளையும் பாதிப்புகளையும் புறக்கணித்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்களை எடுப்பது ‘ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல’ என்றும் இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மக்களின் பங்கேற்பின்றித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது கடந்தகால நிர்வாகங்களின் விலக்களிக்கப்பட்ட ஆட்சி வடிவத்தின் நீட்சியே என்றும் இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மன்னார் மக்களின் கோரிக்கை வெறும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதல்ல. மாறாகஇ தங்கள் வாழ்வாதார உரிமைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து ஒரு சமநிலையான தீர்மானத்தை எட்டுவதே ஆகும். கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் மக்களின் கோபமும் வலியும் நியாயமானது என்பதைப் புரிந்து கொள்ள அரசு தவறுவதாகவே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

எனவே மன்னார் மக்களின் கோரிக்கை காற்றாலைத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதல்ல் மாறாக தங்கள் வாழ்வையும் நிலத்தையும் இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் சமூக சமநீதி மற்றும் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால் இந்தநிலைப்பாட்டுக்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான்.
இந்த செயற்றிட்டத்தினை இடைநிறுத்துவதென்ற எண்ணமே இல்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்களை மீளப்பரிசீலிக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னதாக தாங்கள் பதவிக்கு வந்தவுடன் மன்னார் காற்றாலைத்திட்டத்தினை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியை முழுமையாக மறந்துவிட்டது. அப்படியென்றால் ஒரேவழி வெகுஜனப் போராட்டம் தீவிரமயப்படுத்துவது தான்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்!

Next Post

இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

Related Posts

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!
இலங்கை செய்திகள்

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!
இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்
இலங்கை செய்திகள்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026
பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!
இலங்கை செய்திகள்

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

February 12, 2026
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி
இலங்கை செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
Next Post
இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
நோய்களை விரட்டும் இஞ்சி!

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026

Recent News

நோய்களை விரட்டும் இஞ்சி!

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • நோய்களை விரட்டும் இஞ்சி! February 12, 2026
  • CID பணிப்பாளரின் பெயரில் மோசடி! February 12, 2026
  • போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.