வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மாதங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்து வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது வாரத்திற்கு பத்து வாகனங்கள் அல்லது அதற்கும் குறைவாக விற்பனையாவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய வாகனங்கள் சந்தையில் வருவதால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான தேவை கடுமையாக குறைந்துள்ளதால் ஐந்து முதல் பத்து இலட்சம் வரை வாகன விலைகள் குறைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


















