2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,738 ஆகும்.
அத்துடன் சீனாவிலிருந்து 3,684 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,200 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,988 சுற்றுலாப் பயணிகளும், பங்களாதேஷ் 1,577 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 17 இலட்சத்து 59 ஆயிரத்து 540 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


















