தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை நினைவுகூரப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



















