-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் ஓய்வு பெற்ற நூலகர் க. சௌந்தரராஜன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களால் ஆக்கப்பட்ட ஏழு சஞ்சிகைகள் வெளியிடப்படவுள்ளன.
ஆரம்பக்கல்வி மாணவர்களின் ‘கணேச ஒளி’, தரம் 6 மாணவர்களின் ‘கணேச சுடர்’, தரம் 7 மாணவர்களின் ‘கணேச தீபம்’, தரம் 8 மாணவர்களின் ‘கணேச நாதம்’, தரம் 9 மாணவர்களின் ‘கணேச மலர்’, தரம் 10 மாணவர்களின் ‘கணேச விளக்கு’, தரம் 11 மாணவர்களின் ‘கணேச பூங்கா’ ஆகிய சஞ்சிகைகளே வெளியிடப்படவுள்ளன.


















