-த.சுபேசன்-
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவனான மனோகரன் கோணேஸ்வரன் என்ற பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பாலித செனவிரட்ண அண்மையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு கோணேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 35 வருட கால பொலிஸ் சேவையை பூர்த்தி செய்த ஒருவராகவும், தொடர்ச்சியாக கடந்த 11 வருடங்கள் நீர்கொழும்பு நகர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி வந்திருந்த நிலையில், சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாணத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மொழி ஒரு பிரச்சனையாக காணப்படுகின்ற நிலையில் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரியே தமிழ் பேசும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றமை மக்களுடைய பிரச்சனைகளின் பெரும்பகுதியை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


















