-பா.பிரதீபன்-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
வடக்கு,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிக்கட்சியின் வேந்தன் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியினர் பங்கு கொள்ளாத நிலையில் அடுத்த கூட்டத்தில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளனர்.



















