அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.


















