மன்னார் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும், இயந்திரத்தையும் திருடிய நபர் ஒருவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் செவ்வாய்க்கிழமை குறித்த நபர் பயணித்த படகு தமிழ்நாடு, மண்டபம் மரைக்கார் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
குறித்த நபரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















