அமைதிக்கான நோபல் பரிசு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நோர்வேயில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடியுள்ளது.
இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு நோர்வே குழுவினர் அறிவித்தனர். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதாக நோர்வே குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நோர்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. நோர்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் குழுவினர் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு வெனிசுலா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,காரணத்தை தெரிவிக்காமல் கராகஸ் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடிவிட்டதாக நோர்வேயின் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.


















