-நில அபகரிப்பிற்கு என்.பி.பி அரசும் பூரண ஆதரவு-
-நில அபகரிப்பை எதிர்த்து தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும் – ரவிகரன்-
-விஜயரத்தினம் சரவணன்-
வடமாகாண எல்லையில் தமிழ் மக்களின் நிலங்களில் அத்துமீறி குடியேறிய மற்றும் குடியேற்றப்பட்டுள் ள சிங்கள மக்களுக்காக என்.பி.பி அரசாங்கமும் கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
கடந்த 29.10.2025ம் திகதி இடம்பெற்ற வவுனியா – வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மகாவலி அதிகாரசபை அடுத்த வருடத்தில் ‘கிவுல் ஓயா’ திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதி அi மச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிஓயா பகுதிக்கு நீர்ப்பாசனத்தினை மேற்கொள்ளும் வகையில் பெருமளவு நிலத்தை உள்ளடக்கி கிவுல் ஓயா என்ற பாரிய நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேற்படி கிவுல் ஓயா திட் த்தை அமுல்ப்படுத்தினால் பிணக்கிற்குரிய பகுதிகள நீர்தேக்கத்தின்,
நீரேந்து பகுதியாக மாறும் என தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ரவிகரன், தமிழர்களின் பூர்வீக மணலாற்றை வெலிஓயாக மாற்றிவிட்டு அங்கு அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவ ர்களுக்கு இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில்
6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியாவடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் ம ற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள்,
தமிழர்களின் பூர்வீக்கிராமங்கள் பலவும் நீரில்மூழ்கும் அபாயம் ஏற்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக விவசாயக் குளங்களான இராமன்குளம், கொட்டோடைக்குளம்,
ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், க ம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குள ங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும்,
நாவலர்பாம், கல்லா ற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம், வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராம ங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டைக் கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்டபகுதிகள் குறித்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத்
திட்டத்தின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறாக தமிழ் மக்க ளின் பூர்வீக விவசாய நிலங்கள் மற்றும் குளங்கள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவை விழுங்கப்பட் டே இந்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் வெலிஓயாவில் குடியேற்றப்பட்ட
சிங்கள மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது. குடந்தகால அரசாங்கங்கள் செய்ய நினைத்ததை மா ற்றம் இல்லாமல் இன்றைய அரசாங்கமும் செய்கிறது. ஆப்படியானல் அவர்களுக்கும் இவர்களுக்கும் இ டையில் என்ன வித்தியாசம் என்பது தெரியவில்லை.
கிவுல் ஓயா திட்டம் வடக்கில் தமிழரின் இருப்பை அழிப்பதற்கான பாரிய சதி. இந்த சதியை முறியடிக் க தமிழ் மக்கள் ஓரணியில் திரளவேண்டியது கட்டாயம். காரணம் இந்த கிவுல் ஓயா திட்டம் 6000 ஏக் கர் நிலத்தோடு நின்றுவிடாது இன்னும் பல்லாயிரம் ஏக்கர் தமிழரின் நிலத்தை அபகரிக்கும்.
அதில் மாற்றுக் கருத்தில் என்றார்.















