-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
எழுக மூளாய் மறுமலர்ச்சி மையம் நடாத்தும் மகிழ்வரங்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சோதிலிங்கம் ரதிதேவி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஒய்வுபெற்ற பிரதம செயலாளர் இ..இளங்கோவன் பிரதம விருந்தினராகவும் வலிகாமம் மேற்கு முன்பள்ளி ஆசிரிய சங்கத் தலைவி திருமதி, ப.கிருஸ்ணவேணி , வலிகாமம் மேற்கு முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி ர.சத்தியதேவி, மூளாய் அ.மி.த.க. பாடசாலை அதிபர் வி.தயாசீலன் மற்றும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.மயூரன் மற்றும் மூளாய் மனிதவள சனசமூக நிலையத் தலைவர் வ.வசந்தசீலன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















