-த.அம்பிகாவதி-
சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA நிறுவனம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாகாண மட்டத்திலான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் மற்றும் துஐஊயு நிறுவன அதிதி ளுயiஅணைர வுhயமயளi ஆகியோர் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தொழில் வழங்குனர்கள், பயனாளிகள், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் வெற்றிகரமாக தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ள 58 மாற்றுத்திறனாளிகளில் 45 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்ட செயலர் செல்வி உ.தர்சினி, பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துஐஊயு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


















