கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்;படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பரஞ்சோதி முனிவர் குருபூஜையை அடுத்து மாணவர்களின் கலை நிகழ்வும், இளஞ்சைவப் புலவர் க. கயிலைவாசனின் ‘ தண்ணீர் பந்தல் வைத்த படலம் ‘ எனும் சொற்பொழிவும் இடம்பெறும்.
சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


















