-கஜிந்தன்-
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் கரவெட்டி கிழக்கு ஜே-368 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பனம் விதைகள் நடுகை நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தலைமையில் நேற்று ஆரம்பமானது.
இந்தத் திட்டம் 30,000 பனை மரங்களை உருவாக்கும் நோக்குடன் அண்மையில் அமரத்துவம் அடைந்த
சமூக சேவையாளர் கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) ஞாபகார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அகஸ்ரின், வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி, ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


















