-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கட்டைவேலி கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த இரத்தினம் சிலம்புநாதன் (வயது 66) என்பவராவார்.
இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















