-செ.ரவிசாந்-
கந்தசஷ்டி விரத காலத்தை முன்னிட்டு 2355 அடியவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் இலவச பழப் பொதிகள் கையளிப்பு.
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 665 அடியவர்களுக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பழப்பொதிகள் வழங்கப்பட்டன.
ஐந்தாவது நாளாக சந்நிதியான் ஆச்சிரம முன்றலில் வைத்து சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் இந்த பழப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் நேற்று முன்தினம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான ஐந்து தினங்களில் கந்தசஷ்டி விரத காலத்தை முன்னிட்டு 2355 அடியவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் பழப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தலா 1500 ரூபா பெறுமதியான தோடம்பழம், அப்பிள், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம், பல வகையான வாழைப் பழங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பழப் பொதிகளே வழங்கப்பட்டுள்ளன.


















