-செ.ரவிசாந்-
ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் சமாதான நீதவான் ஐ.கோ.சந்திரசேகரம் மலரின் வெளியீட்டுரையையும், சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.


















