-ஞானத்தமிழ்-
வல்வை கணபதி பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் கணபதி படிப்பக செயலாளர் உ.நிசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வல்வை மகளிர் மகா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திருமதி கனுஜா சிவதாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.


















