இலங்கையில் இந்த வருடத்தின் தற்போது வரையில் சுமார் 40 ஆயிரம் கோடிக்கும் அதிக பெறுமதியிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 54 ஆயிரத்து 870 கிலோ போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடற்படையின் பேச்சாளர், இவற்றில் 5,267 கிலோகிராம் கேரள கஞ்சா, 839 கிலோகிராம் ஹெரோயின், 2,038 கிலோ ஐஸ் மற்றும் 33,000 கிலோகிராம் ஹஷp ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 1,683,691 போதை வில்லைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


















