-செ.கபிலன்-
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது :
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு நாளாந்தம் 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்த நாய்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள்ளும், விடுதிகளுக்குள்ளும் சென்று வருகின்றதை காணக் கூடியதாக உள்ளது.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அதிகரித்த கட்டாக்காலி நாய்களின் தொல்லை காரணமாக நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காட்டாகாலி நாய்களை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

















