-சொ.வர்ணன்-
யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டார் முன்பாக இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடத்தின் இறுதியில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வீட்டார் முன்பாக இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கி காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் நான்குக்கு மேற்பட்ட இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்த நிலையில் அதில் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் யாழில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறித்த பிரதான சந்தேகநபர் நிற்பதாக கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















