அச்சுவேலிப் பகுதியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அச்சுவேலி பொலிஸார், கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.27 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பக்கமாக மோட்டார் சைக்கிளில் நேற்று பிற்பகல் 3.27 மணியளவில் இரண்டு பொலிஸார் பயணித்தனர். இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளார்.
வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு முரணான விடயமாகும். மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய பொலிஸாரே பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு பயணித்த கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டமா மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


















