-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பில் கழகம் மேலும் தெரிவிக்கையில்:
பல வருடங்களாக தொடர்ச்சியாக அனுமதிப் பத்திரத்துடன் கட்டைக்காடு பகுதியில் மணல் அகழப்பட்டு வருகிறது. இதனால் குறித்த பகுதி பாரிய குழியாக காணப்படுகிறது.
இதனால் அருகிலுள்ள பல குடும்பங்கள் வசிப்பதால் இயற்கையால் நீரில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும்.
அனுமதிப் பத்திரத்துடன் அனுமதிப் பத்திரத்திற்கு அதிகமாகவும் தொடர்ச்சியாக மணல் அகழப்பட்டு வருவதாலும் தொடர்ந்து மணல் அகழ்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதை உடன் நிறுத்துமாறு கோருகின்றோம் என தெரிவித்துள்ளது.


















