-செ.ரவிசாந்-
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.


















