-செ.ரவிசாந்-
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொக்குவிலிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ரவிராஜின் உருவப் படத்துக்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, உருவப்படம் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஒருநிமிட அகவணக்கத்தைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்படி நிகழ்வில் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர், கட்சியின் நிதிப் பொறுப்பாளர் தீபன் திலீசன், மூத்த எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















