மொனராகலை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையானது கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
பதுளைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர், அவர் கர்ப்பமாகியதை அறிந்தவுடன் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் குருதலாவ பகுதியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்டையில், 2024 ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் வெல்லாவய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
















