-பா.சதீஸ்-
புதுக்குடியிருப்பு பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட திறந்த பிரிவுக்கான நாடகப் போட்டியில் ஜெயம் ஜெகனின் மூன்று நாடகங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டன.
அதாவது ஜெயம் ஜெகனின் நெறியாளுகையில் உருவான புத்தகம் எனும் நாடகம் முதலாம் இடத்தையும், வாசிப்பை சுவாசிப்பாக கொண்டவர்கள் எனும் நாடகம் இரண்டாம் இடத்தையும், அறிவின் வாசல் எனும் நாடகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
இதேவேளை, பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.


















