-ஞானத்தமிழ்-
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச கலாசாரப்பேரவையும் கரைச்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப்பெருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி அஜிதா பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும் சமய, சமூக, கலை மற்றும் இலக்கிய விற்பன்னர் திருமதி செல்வராணி சோமசேகரம்பிள்ளை கௌரவவிருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் கலைநிகழ்வுகள், கரை எழில் – 9 நூல்வெளியீடு, மற்றும் கலைஞர்களுக்கான கரை எழில் விருது வழங்கல் நிகழ்வு என்பன நடைபெறவுள்ளன.


















