-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி இலங்கை சாரணர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான மாவட்ட சேவை மற்றும் உறவு மாத சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட சாரண சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் சி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், சாரண மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.



















