-வீதி மின் விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை-
-சு.பாஸ்கரன்-
வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாததால் நீண்டகாலமாக இரவு வேளையில் பரந்தன் நகர் சந்திப் பகுதி இருள் மூழ்கி காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் வழிப்பறிக் கொள்ளைகளும் அதிகரித்து காணப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் வீதி விளக்குகளை பொறுத்துவதற்கு முன்வர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான உபநகரங்களில் ஒன்றாக காணப்படும் பரந்தன் நகர் சந்தி பகுதி காணப்படுகின்றது.
இது பூநகரி,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய வீதிகளை இணைக்கும் வடமாகாணத்தின் போக்குவரத்து குவிவு மையங்களில் ஒன்றாக உள்ளது.
இவ்வாறான நிலையில்,இந்த சந்திப் பகுதியிலுள்ள வீதிகளில் மின் விளக்குகள் எதுவும் பொருத்தப்படாதுள்ளதால் நீண்டகாலமாக இரவு வேளைகளில் இருள் மூழ்கிக் காணப்படுகின்றது.
ஏ-9 வீதியிலும், பரந்தன் -முல்லைத்தீவு விதி, பரந்தன்- பூநகரி வீதியிலும் காணப்படுகின்ற பாதசாரி கடவைகளிலும் மின்விளக்குகள் இல்லாதுள்ளன.
பரந்தன் நகர் பகுதியில் பஸ் நிலையம்,இரு அரச வங்கிகள,; தபாலகம், பல நோக்கு கூட்டுறவு சங்கம,; எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்கள் பரந்தன் சாந்தியை மையப்படுத்திய அமைந்துள்ளதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இரவு பகலாக காணப்படுகின்றது.
இரவு வேளையில் மின் விளக்குகள் இல்லாது குறித்த சந்திப் பகுதி; இருளில் மூழ்கி கிடைப்பதால் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றதுடன் பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் வீதி மின் விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















