யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முற்றாகவும், 06 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 218 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு வீடு முழுமையாகவும் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள், மதகுகளை தடை செய்ய வேண்டாம் என கோருகிறோம். அத்துடன், எதிர்வரும் நாட்களில் பகல் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால், பொதுமக்கள் அது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.


















