-பா.பிரதீபன்-
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 180 லீற்றர் கோடா கசிப்பு உற்பத்தி செய்யும் பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















