-செ.ரவிசாந்-
கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி அச்சுவேலியில் பதிவாகியுள்ளது.
இக்காலப் பகுதியில் அச்சுவேலியில் 63.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களுக்குள் யாழ்.மாவட்டத்தில் நான்கு தடவைகள் அதிகூடிய மழைவீழ்ச்சி அச்சுவேலியில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையத்தினர் குறிப்பிட்டனர்.


















