-நிழற்குடையின் கூரை சேதம்-
-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்குப் பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் பகுதியில் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். பலத்த காற்று வீசியதால் நிழற்குடை ஒன்றின் கூரையும் சேதமடைந்துள்ளது.
மறு அறிவித்தல்வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


















