-கஜிந்தன்-
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபையினர் மேற்கொண்டு வருகின்றனர். கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை.


















