ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் அதிக வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.
குறித்த போட்டி கடந்த சனிக்கிழமை ஜோர்ஜியாவில் நடைபெற்றது. இக்குழுவில் மன்னார் யூசிமாஸ் பயிற்சி நிலைய மாணவர்கள் 4 பேர் பங்கேற்று வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றனர்.
அவர்களில் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை), ராஜநாயகம் ரியானா (தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st runner up வெற்றிக் கிண்ணங்களையும், வின்சென்ட் செகைனா தியோரா (மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை), 2nd runner up வெற்றிக் கிண்ணத்தையும் மற்றும் வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd runner up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றுள்ளார்கள்.
அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS world cup போட்டிக்கான அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் தலைமையேற்றிருந்தார்.
இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்குபற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


















