-கஜிந்தன்-
மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா நிதியில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்று காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற வீதி அமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் சபையின் தவிசாளர் ஜெசீதன், பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


















