-க.கனகராசா-
யாழ். துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு மாநகர சபை குழுக்களில் மிஞ்சியிருக்கும் நிதி மற்றும் சபை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சீர் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையினது கல்வி மற்றும் விளையாட்டுக் குழு தலைவர் விக்டர்குமார் சுரேன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
துரையப்பா மைதானத்திளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சபையின் கல்வி மற்றும் விளையாட்டுக்குழு அங்கு தமது முதலாவது கள விஜயத்தினை அண்மையில் மேற்கொண்டிருந்தது.
இதன் போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் காணப்படும் குறைபாடுகளை இக்குழு கண்டறிந்ததுடன் அங்கு பயிற்சிகளை வழங்குகின்ற பயிற்றுவிப்பாளர்களும் பயிற்சியாளர்களும் மைதானத்திலுள்ள தேவைகள் குறித்து குழுவிடம் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர்.
இதன் பிரகாரம் மாநகர சபை குழுக்களில் மீதமாகவுள்ள ஒரு லட்சம் ரூபாவை முதல் கட்டமாக உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றி பாய்தலுக்கான ளுவயனெ கொள்வனவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மைதானத்தில் காணப்படும் பழுதடைந்த மின் விளக்குகளை திருத்துவதற்கு சபை நிதியை பயன்படுத்தி சீர்செய்யவுள்ளதுடன் துரையப்பா மைதானத்தில் மின்பிறப்பாக்கி இயங்காத வேளையில் யாழ் பொதுசன நூலக மின்சாரத்தை பயன்படுத்தவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


















