-கஜிந்தன், சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி – முகமாலை இத்தாவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் பலியாகினார்.
முகமாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றது.
ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (வயது-52) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக பலியானார்.
இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ரயில் கடவையில் ஏற்கனவே ஒரு விபத்துச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















