-அன்ரனி திலக்-
ஆழிப்பேரலை நினைவேந்தல் நாளில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளமை பொருத்தமானதல்ல என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2004ம் ஆண்டு இலங்கையில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கிய ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவேந்தல் இன்று,
இந்த நாளில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார்கள். இதனை தெரிந்து செய்தார்களா? தெரியாமல் செய்தார்களா? என்பது தெரியவில்லை, முழு நாடும் இழந்த தமது உறவுகளை அஞ்சலிக்கவிருக்கிறது. இதனை கருத்தில் கொள்ளாமல் யாழ்.மாவடட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது பொருத்தமற்ற விடயம், என அவர் மேலும் தெரிவித்தார்.


















