-இ.கலைஅமுதன்-
யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் மீட்கப்பட்டது.
யாழ். மாநகர சுகாதாரக் குழுத் தலைவர் சாருஜன், மாநகர பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன், மாநகரசபை உறுப்பினர் சு.நிஷாந்தன், மயூரன் உள்ளிட்ட குழுவினரால் குறித்த கொல்களம் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிடப்பட்டது.
நத்தார் தினத்தை முன்னிட்டு அனுமதியற்ற முறையில் காதுப் பட்டி இன்றி குறித்த மாடுகள் கொண்டுவரப்பட்டு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தபோது மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மாடுகள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


















