-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படவுள்ள வணிக நிர்வாகத்திற்கான முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இரண்டு வருடங்களைக் கொண்டதாக நடைபெறவுள்ள இக்கற்கைநெறிக்கு இளமாணி பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறி விண்ணப்பத்தை https://www.maco.jfn.ac.lk/index.php/mba-application-intake-ix/ என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















