-கஜிந்தன்-
சாவகச்சேரி, மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கனடாவில் வசிக்கும் மனித நேய சமூக செயற்பாட்டாளரான காமலிற்றாவினால் வழங்கப்பட்ட நிதியில் 5 ஆவது ஆண்டில் காலடி வைக்கும் பிரீத்தி அறக்கட்டளையின் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.



















