-த.சுபேசன்-
கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
இயங்குநிலை அற்று இருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி பிரதேச சபையினர் மரக்கறி வியாபாரத்திற்கு ஏற்ற வகையில் புனரமைப்புச் செய்திருந்த நிலையில் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி திறப்பு விழாவில் பிரதேசசபைத் தவிசாளர் குகதாசன் சபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.


















