-சி.ஜெகதீஸ்வரன்-
மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் குருநகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிதரன் (வயது-54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
நேற்று புதன்கிழமை காலை எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் பிற்பகல் உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.


















