-பா.பிரதீபன், அன்ரனி திலக்-
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 10 ராமேஸ்வரம் மீனவர்களையும் விளக்கமறியலில் வை;கக உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்கள் சட்டவிரோத தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடற்றொழிலில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டனர் இதன்போது கைதான 10 மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.


















