-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் அகில இலங்கை சைவநெறி மற்றும் தமிழ்மொழி தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் காலை 8.30 மணிக்கு தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு சைவநெறித் தேர்வும், காலை 9 மணிக்கு தரம் 2 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கு சைவநெறித் தேர்வும் காலை 9.30 மணிக்கு தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான சைவநெறித் தேர்வும் தரம் 12 மாணவர்களுக்கான இந்துசமயம் மற்றும் இந்துநாகரிகம் ஆகிய பாடத் தேர்வும் 10.30 மணிக்கு தரம் 2 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கு தமிழ்மொழித் தேர்வும் முற்பகல் 11 மணிக்கு தரம் 6 முதல் தரம் 8 வரையான மாணவர்களுக்கு தமிழ்மொழி தேர்வும் இடம்பெறவுள்ளன.
இப்பரீட்சைகளுக்கான சுட்டெண் பாடசாலைகளுடாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















