-சி.ஜெகதீஸ்வரன்-
தெல்லிப்பழை – 8ம் கட்டை சந்தியில் துவிச்சக்கர வண்டியிலிருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த திங்கட்கிழமை காங்கேசன்துறை வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தபோது துவிச்சக்கர வண்டியிலிருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தார்.
உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில் கதிரன் ஐயாத்துரை (வயது-73) என்பவரே உயிரிழந்தார்.
மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பளை பொலிசார் நெறிப்படுத்தினர்.


















