-இ.கலைஅமுதன்-
யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை யாழ்.நகரிலுள்ள தனியார் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசாவின் தலைமையுரையுடன் ஆரம்பமான நிகழ்வில் வளவாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் கலந்துகொண்டார்.


















